தமிழினி தொடர்ந்தும் விளக்கமறியலில்

கைதுசெய்யப்பட்டு இராணுவ தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் மகளிர் பிரிவு அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினியை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் உத்தரவிட்டுள்ளார். வன்னியில் இறுதிக்கட்ட போர் நடைபெற்ற வேளையே இவர் இராணுவத்தினரிடம் சரணடைந்தார். சுப்பிரமணியம் சிவகாமி என்ற தமிழினி நேற்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட வேளையில் இந்த உத்தரவு பிறக்கப்பட்டது.

இவரை தடுத்து வைத்து விசாரணை செய்யும் போது தமிழீழ விடுதலைப்புலிகள் கடந்த கால செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்கள் கிடைக்கப்பெற்றதாக குற்றப்புலனாய்வு பொலீஸார் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply