கிழக்கு அபிவிருத்தி இனப்பிரச்சினையைத் ஆழப்படுத்தாது: அமெரிக்கா
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை முன்வைப்பதற்கு முன்னர் கிழக்கு மாகாணத்தில் அர்த்தமுள்ள அபிவிருத்தி ஏற்படுத்தப்படவேண்டியது அவசியமானது என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
குறிப்பாக கிழக்கு மாகாணத்திலுள்ள மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்பட வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபேர்ட்.ஓ.பிளேக் கூறினார்.
கிழக்கு மாகாணத்தில் அமெரிக்காவால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் திட்டங்கள் இனப்பிரச்சினையை மேலும் ஆழமாக்கும் எனவும், அரசியல் தீர்வின் பின்னரே கிழக்கில் அபிவிருத்தியை ஏற்படுத்த முடியுமெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியிருந்தார். இந்தக் கருத்துத் தொடர்பாக பதிலளிக்கும் நோக்கிலேயே அமெரிக்கத் தூதுவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினரின் கருத்துடன் தான் இணங்கவில்லையெனத் தெரிவித்திருக்கும் அமெரிக்கத் தூதுவர், கிழக்கு மாகாண மக்கள் தொழில்வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவான தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்கவேண்டிய அவசியம் காணப்படுவதாகக் குறிப்பிட்டார்.
மாகாணசபையை ஒதுக்கிவிட்டு மத்திய அரசாங்கமும், அமெரிக்க முகவர்களும் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டையும் அவர் மறுத்துள்ளார்.
அபிவிருத்திப் பணிகளுக்கான நிதியுதவி நேரடியாக மத்திய அரசாங்கத்துக்கு வழங்கப்படுவதில்லையெனவும், இலங்கையிலுள்ள நிறுவனங்களுக்கு அமெரிக்காவிலிருந்து நேரடியாக நிதியுதவி வழங்கப்பட்டு, அதன் ஊடாகவே அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பிளேக் கூறினார்.
எந்த நாட்டிலும் மத்திய அரசாங்கத்துடன் இணைந்தே நாங்கள் பணியாற்றுகின்றோம். ஆனால், நிதியுதவிகள் நேரடியாக மத்திய அரசாங்கத்துக்கு வழங்கப்படுவதில்லை” என்றார் அவர்.
இலங்கையில் வறிய மாகாணங்களில் கிழக்கு மாகாணமும் ஒன்று என்பதை அமெரிக்கா நன்கறிந்திருப்பதாலேயே அங்கு பொருளாதார வாய்ப்புக்களை ஏற்படுத்தி அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வருவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபேர்ட்.ஓ.பிளேக் மேலும் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply