ஆப்கானில் பத்து மருத்துவ பணியாளர்கள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்
வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் வாகன தொடரணி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பத்து மருத்துவ பணியாளர்கள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 6 பேர் அமெரிக்கர்கள், இரண்டு பேர் ஆப்கானிஸ்தான் நாட்டவர்கள் மற்றும் ஜெர்மன் மற்றும் பிரிட்டனை சேர்ந்த இருவர். பதக்க்ஷான் பிராந்தியத்தில் நடைபெற்ற இந்த தாக்குதலுக்கு கொள்ளை அடிப்பதே நோக்கமாக தெரிகிறது என மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் இவர்கள் பைபிள்களை கொண்டு சென்றதாலும், அமெரிக்காவுக்கு வேவு பார்த்ததாலும் அவர்களை கொன்றதாக தாலிபான் மற்றும் ஹெஸ்பி இஸ்லாமி ஆகிய இரு குழுக்கள் உரிமை கோரியிருக்கின்றன. ஆனால் மருத்துவ பணியாளர்கள் பணிபுரிந்து வந்த சர்வதேச உதவி அமைப்பு என்ற கிறிஸ்துவ அறக்கட்டளை இதனை மறுத்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply