நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் ஆலோசனை சிறுபான்மையினருக்கு பாதிப்பை தரும் : த.தே.கூ

அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையிலான நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் ஆலோசனைகளை அப்படியே உள்வாங்கி, தேர்தல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டால் அது நிச்சயமாக சிறுபான்மை இனமக்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும். அவ்வாறனதொரு திருத்தத்தை நாம் ஏற்றுக்கொள்ளவும் மாட்டோம்.

வடக்கு,கிழக்கு மற்றும் அவற்றுக்கு வெளியே வாழும் தமிழ், முஸ்லிம் மற்றும் மலையக மக்களின் விகிதாசாரம் பேணப்பட்டு அதற்கேற்ப அவர்கள் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படுமானால் மட்டுமே இந்தச் திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

நடைமுறையிலுள்ள தேர்தல் சட்டங்களைத் திருத்துவது குறித்து அரசாங்கம் மேற் கொண்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஷ் பிரேமச்சந்திரன் வீரகேசரி வாரவெளியீட் டுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர் கூறியதாவது,

தினேஷ் குணவர்தன தலைமையிலான நாடாளுமன்றக் குழு அமைக்கப்பட்ட காலம் முதல் அதன் சிபார்சுகள் முன்வைக்கப்பட்ட காலம் வரை நாம் எமது கருத்துகளைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளோம். எமது கட்சிமட்டுமல்ல பல சிறுபான்மை இனக்கட்சி களும் இதனை எதிர்த்தே வந்துள்ளன. சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவம் குறையாத வகையிலும் அவர்களின் விகிதாசாரத்தன்மைக்கு பங்கம் ஏற்படாத முறையிலும் தேர்தல் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்படுமானால் அது தொடர்பில் ஆராய்வதற்குத் தயாராகவிருப்பதாக நாம் முன்னரே கூறியிருந்தோம். ஆனால்,“ எமது ஆலோசனைகளை நிராகரித்து விட்டுத் தாம் விரும்பியவாறு திருத்தத்தைக் கொண்டு வருவதாயின் அதனை ஏற்றுக் கொள்ளமுடியாது.

மேலும்“, இது தொடர்பில் எம்முடனும் பேச்சுவார்த்தை நடத்த அரசு அழைத்தால் எமது மக்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும் வகையிலான பேச்சுவார்த்தைகள், தீர்வுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப் படுவதும் உறுதிப்படுத்தப்படுமாயின் அனைத்து விடயங்கள் தொடர்பிலும் நாம் பேசலாம். தமிழ்மக்களின் பிரச்சினைகளை வழ மைபோல் குப்பைக் கூடைக்குள் போட்டுவிட்டு ஏனைய பிரச்சினைகள் பற்றி மட்டும் பேசுவதென்றால் அதனை நாம் ஏற்றுக் கொள்ளமாட்டோம். அதாவது அரசாங்கம் விரும்புவதனை மட்டும் பேசவேண்டு மென்றால் அது கஷ்டமானதாகவே இருக்கும். அத்துடன் பெரும்பான்மை இனம் தாம் விரும்புவதனை மட்டுமே இந்த நாட்டில் செய்ய முடியுமென்ற ஒரு நிலையையும் இது தோற்றுவிக்கும்.

சிறுபான்மை இனமக்களின் அபிலாஷைகள், அவர்களது அடிப்படை உரிமைகள் தொடர்பில் கடந்த காலங்களில் காட்டப்பட்ட மாற்றாந்தாய் மனப்பான்மை, மறுப்புத்தன்மை போன்றவை காரணமாகவே இந்த நாட்டில் கடந்த முப்பது வருடகாலமாக யுத்தம் இடம்பெற்றது. இந்த நிலை தொடர்வதனை அரசாங்கம் எதிர்காலத்தில் தவிர்த்துக் கொள்ளவேண்டும். இன்னும் தமிழ்மக்களைப் புறந்தள்ளி நடக்கமுயன்றால் அதன் எதிர்கால விளைவுகளும் கடந்தகாலங்களைப் போன்று அமையலாம்.

இதேவேளை, யாப்புத் திருத்தம் தொடர்பில் அரசாங்கத்துக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக் குமிடையே இடம்பெற்று வந்த பேச்சு வார்த்தைகள் தொடருமா என்பதும் சந்தேகமே. அரசுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்குமிடையே ஒரு புரிந்துணர்வு காணப்பட்டதாகவும் அதனடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரை யும் ஆளுங்கட்சியுடன் சேர்ப்பதில்லை யென இணக்கம் காணப்பட்டதாகவும் முன்னர் தெரி விக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த இணக்கப் பாடானது கடந்த வாரம் இரு எம்.பிக்களை ஆளும்தரப்பு உள்வாங்கிய துடன் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள் ளதாக அறிகிறேன்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் அரசு பேசிய போது சிறுபான்மை இனக் கட்சிகளின் தேவை அரசுக்குத் தேவையில்லாததொன்றாகவே காணப்பட்டது. அதேவேளை, இன்றும் அந்தத் தேவை இருக்குமா என்பது கேள்விக்குறியே. காரணம் இன்னும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசு விலைக்கு வாங்கவும் கூடலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply