ஆளும் கூட்டமைப்பில் போட்டியிட ஐ.தே.க. மாற்றுக்குழு தீர்மானம்

எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் மாற்றுக்குழு தீர்மானித்துள்ளது.
 
ஐக்கிய தேசியக் கட்சியின் மாற்றுக் குழுவின் தலைவராகவிருந்த கரு ஜெயசூரிய மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துகொண்டதைத் தொடர்ந்து எதிர்காலத் தேர்தல்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றி மாற்றுக்குழுவினர் கூடி ஆராய்ந்திருந்தனர்.

எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிடுவதென நாங்கள் ஏகமனதாகத் தீர்மானம் எடுத்துள்ளோம்” என மாற்றுக்குழு உறுப்பினரும், ஊடகத்துறை அமைச்சருமான லக்ஷ்மன் யாப்பா அபயவர்த்தன கூறினார்.

இந்த முடிவில் எந்தவிதமான மாற்றமும் இல்லையென அமைச்சர் கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்தார்.

அதேநேரம், ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடவிருப்பதாக அக்கட்சியின் உறுப்பினரும், பிரதி அமைச்சருமான முத்துசிவலிங்கம் கூறினார்.

வடமேல் மாகாணத்தில் 12 உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடவிருப்பதாக அவர் தெரிவித்தார்.

அதேநேரம், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுவதா தனித்துப் போட்டியிடுவதா என்பது பற்றி தீர்மானம் எதுவும் இதுவரை எடுக்கவில்லையென மலைகய மக்கள் முன்னணி கூறியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி கூடி ஆராய்வு

இதுஇவ்விதமிருக்க, எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல்களுக்கான வேட்பாளர்களை நியமிப்பது பற்றி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் சிரேஷ்ட உறுப்பினர்கள் கூடி ஆராய்ந்துள்ளனர்.

வடமேல் மாகாணசபைக்கான முதன்மை வேட்பாளரை தாம் இன்னமும் தீர்மானிக்கவில்லையென கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply