ஈரான் உதவியுடன் 1000 கிராமங்களுக்கு மின் வழங்கும் திட்டம் இன்று ஆரம்பம்

வட மாகாணம் உட்பட இரண்டரை இலட்சம் குடும்பங்களுக்கு மின்சாரம் வழங்கும் பாரிய மின் விநியோகத்திற்கான நிர்மாணப் பணிகளை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

106 மில்லியன் அமெரிக்க டொலர் ஈரானிய நிதியுதவியுடன் இன்று குருநாகல் யாப்பஹ¥வவில் இத்திட்டம் பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பிக்கப்படுவதுடன் உடனடியாகவே நூறு மின் கம்பங்கள் இன்று நாட்டப்படவுள்ளன. அமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் அமைச்சர்கள் சம்பிக்க ரணவக்க, ஜோன் செனவிரத்ன, பிரதியமைச்சர் டி. பி. ஏக்கநாயக்க உட் பட அமைச்சர்கள், துறைசார்ந்த முக்கிய ஸ்தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர். இது தொடர்பில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவிக்கை யில்:

இலங்கையின் கிராமப்புற மின் சார திட்டத்துக்கு ஈரான் 106 மில்லி யன் அமெரிக்க டொலர்களை கட னாக வழங்கியுள்ளது. 1000 கிராம ங்களுக்கு இத்திட்டம் மூலம் மின் சாரம் வழங்கப்படும். சுமார் 2 இலட்சத்து 50 ஆயிரம் குடியிருப்புகளுக்கு மின்சார வசதியை வழங்கும் இந்த திட்டத்தின் கீழ் வட மாகாணம் உள்ளிட்ட பல மாகாணங்கள் பயன்பெறுகின்றன.

ஈரானின் பொருளாதார அபிவி ருத்தி வங்கி இந்த திட்டத்துக்கான நிதியை வழங்குகிறது.
முன்னதாக உமா ஓயா நீர் மின் திட்டம் மற்றும் 15 ஆயிரம் ஹெக் டயர் காணிக்கு நீர் வழங்கும் திட் டம் ஆகியவற்றுக்கு ஈரான் 450 மில் லியன் அமெரிக்க டொலர்கள் நிதி உதவி வழங்கியிருந்தமை குறிப்பிடத் தக்கது.

குருநாகல் யாப்பஹ¥வயில் ஆரம் பிக்கப்படும் மேற்படி மின் திட்ட த்திற்கான நிதியுதவியை ஈரானிட மிருந்து பெற்றுக் கொடுப்பதில் முன்னாள் மின்வலு எரிசக்தி அமை ச்சர் ஜோன் செனவிரத்ன, அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, அமை ச்சின் செயலாளர் எம். எம். சி. பெர்டி பெனாண்டோ, ஈரானு க்கான இலங்கைத் தூதுவர் எம். எம். சுஹைர் ஆகியோர் முக்கிய பங்காற்றியுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply