விடுதலைப்புலிகளின் தலைவர் பெயரைப் பயன்படுத்தி புலம் பெயர் நாடுகளில் நிதி சேகரிப்பு.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று கூறி புலிச்சார்பு புலம்பெயர் அமைப்புக்கள் தமிழர்களிடம் நிதி சேகரித்து வருகின்றனர் என்று சமாதான செயலகத்தின் முன்னாள் தலைவர் பேர்னாட் குணதிலக தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு இன்று தெரிவித்தார். அவர் முதலாவது நபராக ஆணைக்குழு முன் ஆஜராகி சாட்சியம் வழங்கினார்.

அப்போதே இப்படிக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்

“வே.பிரபாகரனின் கையெழுத்து இடப்பட்ட ஆவணங்களைப் பயன்படுத்தி புலிச் சார்பு அமைப்புக்கள் இவ்வாறு நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன,2002 ஆம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்த காலத்தில் ஜ.தே.க அரசுக்கும் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுக்களின் போது அரசுத் தரப்பு பிரதிநிதிகளில் ஒருவராக கலந்து கொண்டு முக்கிய பங்கு ஆற்றி உள்ளேன்” என்றார் அவர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply