இலங்கைத் தமிழ் அகதிகளை கனடா ஏற்றுக் கொள்ளக் கூடாது விளக்கத்துடன் அந்நாட்டுப்பத்திரிகை
தமிழ் அகதிகள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளும் நாடாக கனடா மாறக் கூடாது இலங்கை தமிழர்களுடன் வந்து கொண்டிருக்கும் எம்.சி.சன்.சி என்கிற கப்பலை கனேடிய கடல் எல்லைக்குள் நுழைய விடாமல் அரசு திருப்பி அனுப்பி விட வேண்டும் என்று வலியுறுத்தி கனடாவின் நாஷனல் போஸ்ட் ஆங்கில பத்திரிகை ஆசிரியர் தலையங்கம் தீட்டி கருத்து வெளியிட்டுள்ளது.
இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமான போர் கடந்த வருடம் முடிவுக்கு வந்தது. அதைத்தொடர்ந்து விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்த சிலர் வெளிநாடுகளில் அகதிகள் என்கிற போர்வையில் தஞ்சமடைந்து வருகின்றனர்.கடந்த மாதம் இந்த கப்பல் ஆஸ்திரேலியா சென்றிருந்தது.இதில் பயணித்திருப்பவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பினர் என்பதால் ஆஸ்திரேலியா இவர்களை ஏற்கவில்லை.
உலகிலேயே கனடாவில் தான் புலம்பெயர் தமிழ் சமூகத்தினர் மிக அதிக எண்ணிக்கையில் வாழ்கின்றனர்.இவர்களில் பெரும்பாலாநோர் புலிகள் அமைப்பின் ஆதரவாளர்களே.இந்த அமைப்பைச் சேர்ந்தவர்களை இனியும் நாட்டுக்குள் அனுமதிக்கின்றமை பேராபத்துக்களை இரட்டிப்பாக்கி விடும்.புலி ஆதரவாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நிதி திரட்டி வருகின்றனர்.
இந்நிலை தொடருமானால் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்களில் ஒன்றான விடுதலைப்புலிகள் அமைப்பு வலுப்பெற்று விடும். மேலும் எம்.வி.சன்.சி என்ற பெயரில் தற்போது வரும் கப்பல் முன்னர் ஹரின் பனிச் என்ற பெயரில் அழைக்கப்பட்டது.விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்களை கடத்தும் பணியில் ஈடுபட்ட கப்பல் இது.
மனிதக் கடத்தல் வர்த்தகத்தின் மூலமாக மாத்திரமே இந்த அமைப்புக்கு ஆளொருவரிடம் இருந்து 45,00 டொலர்கள் வருமானமாக கிடைத்து வந்திருக்கிறது என புலனாய்வு துறையினரின் விசாரணைகள் மூலம் தெரிய வந்திருக்கிறது.இந்நிலையில் எம்.வி.சன்.சி கப்பல் நூற்றுக்கணக்கான அப்பாவித் தமிழர்களை அதன் பிடியில் வைத்துள்ளது.
1980 களில் இருந்து கனடாவுக்கு இவ்வாறு வந்து கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்கள் குறித்த பரிதாபகரமான கதை ஒன்றை டொரோண்டோ ஸ்டார் என்ற செய்தி நிறுவனம் புதனன்று வெளியிட்டிருந்தது.அதில் இலங்கைத்தமிழர்கள் பலர் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட போதும் அமைதியாகவே வாழ்ந்து வந்துள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply