கோரிக்கையை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது : அநுர பிரியதர்ஷன யாப்பா

இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் ஐ.நா.விடம் விடுத்துள்ள கோரிக்கையை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதென சுற்றாடல் அபிவிருத்தியமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவிததார்.

அமைச்ரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பிற்பகல் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கையில் யுத்தக் குற்றம் நடைபெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை இலங்கை அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பில் விசாரணைகளை நடத்த அரசாங்கம் தேசிய நல்லிணக்க குழுவை நியமித்துள்ளது. அதன் விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் வேறு எவரினதும் கருத்துக்களுக்கு செவிசாய்க்க வேண்டிய அவசியம் இல்லை. இது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை இலங்கை எடுத்துள்ளது. இதற்கு முன்னரும் மனித உரிமைகள் தொடர்பில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டை உலக நாடுகளின் ஆதரவுடன் நாம் முறியடித்தோம் என்றும் அமைச்சர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply