சரத் பொன்சேகாவிற்கு எதிரான இராணுவ நீதிமன்றின் தீர்ப்பிற்கு ஐ.தே.க கண்டனம்

ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு இராணுவ நீதிமன்றம் விதித் தீர்ப்பிற்கு ஐக்கிய தேசியக் கட்சி கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இராணுவ நீதிமன்றின் தீர்ப்பு வராற்று ஏடுகளில் கறுப்பு களங்கமாக திகழும் என கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

இராணுவத் தலைவர்களுக்கு அரசாங்கம் அபகீர்த்தி ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிப் பயங்கரவாதிகளை இல்லாதொழிக்கும் பணிகளில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா வழங்கிய பங்களிப்பு உதாசீனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சரத் பொன்சேகா மிகவும் ஒழுக்கமானவர் எனவும், உலக இராணுவங்களை வழிநடத்தக் கூடிய வல்லமை படைத்தவர் எனவும் அரசாங்கத்தின் பலர் குறிப்பிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. அரசியலில் ஈடுபடத் தீர்மானித்த ஒரே காரணத்தினால் அவர் பல்வேறு சவால்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரத் பொன்சேகாவிற்கு இராணுவ நீதிமன்றம் விதித்த தீர்ப்பிற்கு கண்டனம் வெளியிடும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply