மீள் குடியேற்றப்பட்ட மக்களின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும்
மீள் குடியேற்றப்பட்ட மக்களின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. மீள் குடியேற்றப்பட்ட அநேகமானவர்களின் அடிப்படை வசதிகள் இன்னமும் முழுமையாக நிறைவேற்றப்பட வில்லை எனக் குறிப்பிடப்படுகிறது. யுத்த காலத்தில் பெரும் எண்ணிக்கையிலான வீடுகள் மற்றும் கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் அவை இன்னமும் பழுதுபார்க்கப்படவில்லை எனவும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனிதாபிமான இணைப்புச் செயலகம் அறிவித்துள்ளது.
மீள் குடியேற்றப்படும் மக்களுக்கு உசிதமான இருப்பிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது மிகவும் அவசியமானதென இணைப்புச் செயலகத்தின் தலைவர் ஸோலா டெவொல் தெரிவித்துள்ளார். விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ள நிலக்கண்ணி வெடிகள் துரித கதியில் அகற்றப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வரையில் மக்களுக்கு உணவு நிவாரணங்களை வழங்க வேண்டிய நிலை காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். இதேவேளை, 34476 பேர் இன்னமும் இடம்பெயர் முகாம்களில் தங்கியிருப்பதாகவும் விரைவில் அவர்கள் மீள் குடியேற்றப்படுவார்கள் எனவும் இராணுவம் அறிவித்துள்ளது.
இதுவரையில் 203208 பேர் மீள் குடியேற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply