ஜீஎஸ்பி வரிச்சலுகையை இழப்பதற்கு ரணில்-மங்களவே காரணம் : அமைச்சர் டலஸ் அழகப்பெரும

ரணிலும், மங்களவும், புலி ஆதரவாளர்களும் எமது நாட்டிற்கு ஜீஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை கிடைக்கக்கூடாது என்பதில் தீவிரமாக செயற்பட்டனர். இவர்களின் செயற்பாடுகளுக்கு முன்னாள் இராணுவ தளபதி சரத்பொன்சேகாவும் வெள்ளைக்கொடி கதையை கூறி ஒத்துழைத்தார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் டலஸ் அழகப்பெரும கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறினார்.

” ஜீஎஸ்பி பிளஸ் சலுகைக்காக நாட்டின் இறையாண்மையை காட்டிக்கொடுக்கக்கூடாது. நாட்டுக்காக உழைக்க நாம் தயாராகவுள்ளோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply