2600 மெ. தொ. கூரைத் தகடுகள் இலங்கைக்கு இந்தியா அன்பளிப்பு
2600 மெட்ரிக் தொன் கூரைத் தகடுகளை இந்தியா இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியது. இலங்கையிலுள்ள இந்திய தூதுவர் அசோக் கே. காந்தா மேற்படி கூரைத் தகடுகளை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் நேற்று கொழும்பில் பாராளுமன்ற வீதியில் இடம்பெற்ற ஒரு நிகழ்வின் போது கையளித்தார்.
மேற்படி கூரைத் தகடுகளின் பெறுமதி கிட்டத்தட்ட 300 மில்லியன் ரூபாவாகும்.
ஏற்கனவே இவ்வருடம் பெப்ரவரி மாதத்திலும் அதற்கு முன் 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலும் இந்தியா 2600 மெட்ரிக் தொன் கூரைத்தகடுகளை இரு தடவைகள் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
இதில் நேற்று வழங்கப்பட்ட கூரைத்தகடுகள் இந்தியா வழங்கிய மூன்றாவது தொகுதியாகும். இத்துடன் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்துள்ள வர்களுக்காக 50 ஆயிரம் வீடுகளைக் கட்டித் தரவும், வட பகுதி ரயில் பாதை மீளமை ப்பு நடவடிக்கைக்கு 800 மில்லியன் டொலர்கள் கடனுதவியை வழங்கவும் இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளதாக இந்திய தூதுவர் அசோக் கே. காந்தா இந்த நிகழ்வின்போது குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply