வன்னியில் கைவிடப்பட்ட வாகனங்கள் ஒப்படைப்பு
இறுதிக்கட்ட யுத்தத்தில் பொதுமக்களால் கைவிடப்பட்டு பின்னர் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ள வாகனங்களுக்கான உரிமத்தை அடையாளம் காணும் பணிகள் நேற்று மீண்டும் ஆரம்பமாகின. இதற்கான நடமாடும் சேவை இன்றும் இடம்பெறுவதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
முள்ளிவாய்க்காலில் இருந்து 6400 மோட்டார் சைக்கிள்களும் 20 லொறிகள், பெளஸர்கள், கொள்கலன்கள் ஒரு பஸ் உட்பட 70 கனரக வாகனங்களும் கிளிநொச்சிக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. இவற்றுள் 700 மோட்டார் சைக்கிள்களும் ஆயிரக்கணக்கான துவிச்சக்கர வண்டிகளும் ஏற்கனவே உரிமையாளர்களிடம் ஒப்படைக் கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட கணக்காளர் ஜெயராசா, இன்றைய தினம் மோட்டார் சைக்கிள்களின் உரிமையாளர்கள் அடையாளப் பணியைப் பூர்த்தி செய்ய எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
வாகனங்களை உரியவர்களிடம் இலகு வாக ஒப்படைக்க ஏற்பாடுகளை செய்ய உதவுமாறு போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கமவிடம் கிளிநொச்சி அரச அதிபர் திருமதி கேதீஸ்வரன் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நடமாடும் சேவையின் போது வாகனங் கள், மோட்டார் சைக்கிள்களின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்கள் இனம் காணப்படுவர். அத்துடன் இதுவரை பொதுமக்களினால் இனம் காணப்பட்ட வாகனங்களின் மோட்டார் சைக்கிள்களின் பதிவு செய்யப்படாதவை தொடர்பான பிரச்சினைகளுக்கும் உடனடி தீர்வு காணப்படும்.
ஏற்கனவே வாகன தரிப்பிடத்துக்கு வந்து தமது வாகனங்கள் மோட்டார் சைக்கிள்களை இனம்கண்டு வாகனங்கள் கையளிக்கப்படாத உரிமையாளர்கள் தீர்வினைப் பெற்றுக் கொள்ளுமாறும் அரச அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply