அடுத்த கட்ட கடனுதவி இலங்கைக்கு வழங்கப்படும் ‐ IMF

அடுத்த கட்ட கடனுதவி இலங்கைக்கு வழங்கப்பட உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.இலங்கையின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் செல்வதாகவும், இதனால் கடனுதவியை வழங்குவதில் சிக்கல் கிடையாது எனவும் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். வரவு செலவுத் திட்டத்தின் துண்டு விழும் தொகையை மொத்த தேசிய உற்பத்தியின் எட்டு வீதமாக பேணுவதற்கு இலங்கை அசராங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
 
இதன்படி, இலங்கைக்கு அடுத்த கட்ட கடனுதவியாக 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட உள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் உயர் அதிகாரி பிரயன் எட்கின் தெரிவித்துள்ளார்.
 
இலங்கையின் பொருளாதார நிலைமைகள் திருப்தி அளிக்கும் வகையில் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
அடுத்த கட்ட கடனுதவி எதிர்வரும் செப்டம்பர் அல்லது ஒக்ரோபர் மாதத்தில் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
 
2.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் கோரியுள்ளதாகவும், இதுவரையில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள வரையில் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
 
சர்வதேச அழுத்தம் காரணமாக இலங்கை மத்திய வங்கி வட்டி வீதங்களில் மாற்றம் கொண்டு வரவில்லை என சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.
 
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 2 ஆயிரம் கோடி ரூபாவை கடனாக வழங்கவுள்ளது.
 
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 2 ஆயிரம் கோடி ரூபாவை கடனாக வழங்கவுள்ளது. நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கிவரும் கடன் உதவியின் ஒரு தவணையாக இந்த நிதி வழங்கப்படவுள்ளதாக இலங்கை வந்துள்ள சர்வதேச நாணயத் தூதுக்குழுவின் தலைவர் கலாநிதி பிரய்ன் ஹெய்டிகன்ஸ் தெரிவித்துள்ளார்.
 
இதுதொடர்பான பரிந்துரைகளை சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் சமரப்;பிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
 
இலங்கையின் மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் நேற்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்குவதாக உறுதியளித்த 10 ஆயிரம் கோடி ரூபா நிதி மூன்று தவணைகளாக வழங்கப்படும்.
 
இலங்கையின் பொருளாதார நிலைமை வளர்ச்சியடைந்து வருகிறது. இந்த வருட இறுதியில் வலுவான பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்க்க முடியும் எனவும் பிரய்ன் ஹெய்டிகன்ஸ் தெரிவித்துள்ளார்.
 
சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவினர் கடந்த 11ம் திகதி முதல் கொழும்பில் தங்கியிருந்த பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். அத்துடன், இலங்கையின் பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பான பல்வேறு தரப்பின் கீழ் அவர்கள் கண்காணிப்புக்களையும் மேற்கொண்டிருந்தனர்.
 
அதேவேளை, இலங்கையின் சுற்றுலாத்துறை எதிர்பார்த்தவாறு வளர்ச்சியடைந்து வருவதாகவும் எனினும் எதிர்பார்த்தபடியான வெளிநாட்டு முதலீடுகள் இலங்கையை வந்தடையவில்லை எனவும் தெரிவித்துள்ள நாணய நிதியத் தூதுக்குழுவினர் நாட்டின் நிதிக் கொள்கை இதில் தாக்கதை ஏற்படுத்தியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply