பாதுகாப்பு விவகார செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ் இந்தியா விஜயம்
பாதுகாப்பு விவகார செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ளார். இவர் நேற்று இந்திய தலைநகர் புதுடில்லியை நோக்கி சென்றதாக தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்தார்.பாதுகாப்பு விவகார செயலாளர் தனது விஜயத்தின் போது இந்திய வெளிவிவகார செயலாளர் உள்ளிட்ட முக்கியஸ்த்தர்களை சந்திக்கவுள்ளார். இதன்போது மீள்குடியற்றம் மற்றும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.
இந்திய பிரதமரின் விசேட பிரதிநிதி அடுத்த மாதம் அளவில் இலங்கை வரவுள்ள நிலையில், அது குறித்தும் பாதுகாப்பு விவகார செயலாளர் தனது விஜயத்தின்போது கவனம் செலுத்தவுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply