மழைக்காலத்திற்கு முன் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் : விநாயகமூர்த்தி முரளிதரன்
மழைக்காலம் வருமுன்னர் அனைத்து மக்களையும் மீளக்குடியமர்த்தி அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். நேற்றய தினம் காலை மூதூர் பிரதேசத்தின் கிளிவெட்டியில் முகாமில் உள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடியபோதே அமைச்சர் இந்த உறதிமொழியினை வழங்கியுள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் கிழக்கு, சம்பூர் மேற்கு, கடற்கரைச்சேனை,கூனித்தீவு ஆகிய பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து கிளிவெட்டி முகாமில் தங்கியுள்ள மக்களையே பிரதியமைச்சர் நேற்று சந்தித்து அவர்கள் குறைகள் தொடர்பில் கேட்டறிந்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர்,
இடம்பெயர்ந்து இங்கு தங்கியுள்ள மக்கள் தாங்கள் குடியேற விரும்பும் பகுதியை தெரிவுசெய்து தருமாறு கேட்டதுடன் அங்கு தேவையான வசதிகளை பெற்றுத்தருவதற்கான ஏற்பாடுகளை தான் செய்துதருவதாகவும் உறுதியளித்தார்.
2006ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள பிரதேசத்தை சுமார் 2000 குடும்பத்தினை சேர்ந்த மக்கள் பட்டித்திடல், மணல்சேனை, கட்டைப்பறிச்சான், கிளிவெட்டி ஆகிய பகுதிகளில் குடியமர்த்தப்படவுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply