ஹக்கீமின் செயற்பாடானது ஒழுக்கமற்றது: ஐ.தே. கட்சி

ஐக்கிய தேசிய கட்சிக்கு தெரிவிக்காமல், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஜனாதிபதியை சந்தித்துள்ளார் என ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் காமினி ஜயவிக்கிரம பெரேரா தெரிவித்துள்ளார்.

ரவூம் ஹக்கீம் நேற்றய தினம் ஜனாதிபதியை கண்டி ஜனாதிபதி இல்லத்தில் சந்தித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஜயவிக்கிரம பெரேரா தெரிவித்ததாவது:-

தனது கட்சியிலிருக்கும் ஒருசில உறுப்பினர்கள் அரசுடன் இணைந்து கொள்ளவுள்தாக பரவி வரும் வதந்தி தொடர்பிலேயே ஜனாதிபதியுடன் பேச்சுகளை நடத்தியுள்ளதாக பேச்சுகளின் பின் ரவூப் ஹக்கீம் ஐக்கிய தேசிய கட்சிக்கு தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் ஹக்கீமின் செயற்பாடானது ஒழுக்கமற்றது என ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் காமினி ஜயவிக்கிரம பெரேரா தெரிவித்துள்ளார்.

அரசு பாராளுமன்றத்தில் 2/3 என்ற பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள இன்னும் 5 உறுப்பினர்களே தேவைப்படு்கிறது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு பாராளுமன்றத்தில் தேசிய பட்டியலில் 2 ஆசனமும் தேர்தல் மூலம் 4 ஆசனங்களுமாக மொத்தமாக 6 ஆசனங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply