சவூதி தம்பதியினர் கைது
இலங்கை பணிப்பெண்ணை ஆணிகள் அறைந்து கொடுமைக்குள்ளாக்கியதாக சந்தேகிக்கப்படும் ஒரு தம்பதியை சவூதி அரேபியப் பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். குறிப்பிட்டப் பணிப்பெண் மீது 24 ஆணிகள் ஏற்றி அவர் சித்திரவதைசெய்யப்பட்டிருந்தார்.
சவூதி அரேபியாவில் சித்திரவதைக்குள்ளாகி உடம்பில் 24 ஆணிகள் ஏற்றப்பட்ட நிலையில் நாடு திரும்பிய பெண்ணுக்கு நேற்று மாத்தறை கம்புறுபிட்டிய ஆஸ்பத்திரியில் வெற்றிகரமாக சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சுமார் மூன்று மணித்தியாலங்கள் நீடித்த இந்த சத்திர சிகிச்சையின் மூலம் அவரது உடம்பிலிருந்து 18 ஆணிகள் அகற்றப்பட்டன. ஏனையவை உயிர் ஆபத்தை ஏற்படுத்தாதவை என வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply