முதலமைச்சர் சந்திரகாந்தன் – நிரூபமா இன்று சந்திப்பு

இந்திய வெளியுறவுச்செயலாளர் நிரூபமா ராவ் இன்று காலை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை அவரது அலுவலகத்தில் வைத்து சந்தித்தார். இதன் போது கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தினால் வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகள் அமைப்பது தொடர்பாக இங்கு கலந்துரையாடப்பட்டது.

இநதியாவிலுள்ள சேவா எனும் பெண்கள் அமைப்பின் ஊடாக கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்ப உதவுமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் இதன்போது இந்திய வெளியுறவு செயலாளரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இது தொடர்பாக ஆராய்ந்து ஒரு மாத காலத்திற்குள் முடிவெடுப்பதாகவும் இந்திய வெளியுறவு செயலாளர் நிரூபமா ராவ் தெரிவித்தாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடக இணைப்பாளர் தேவராஜ் தெரிவித்தார். 15 நிமிடம் இடம்பெற்ற சந்திப்பில் பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply