விடுதலைப் புலிகள் சந்தேகநபர்களுக்கு எதிராக ஜேர்மனில் சட்ட நடவடிக்கை
ஜேர்மனியில் கைதுசெய்யப்பட்ட புலம்பெயர் தமிழர்கள் மூவருக்கு எதிராக அந்நாட்டின் சட்டத்தரணிகள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். இவர்கள் மூவரும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக நிதி சேகரித்ததோடு ஆயுதங்களையும் கொள்வனவு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் கைதான வி.எஸ். விஜிகணேந்திரா (35), எம்.சசிதரன் (33), ரி.கோணேஸ்வரன் (39) ஆகிய மூவருமே விடுதலைப் புலிகள் சந்தேகநபர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் ஆவர்.
இவர்கள் மூவரும் 2007 ஆம் ஆண்டு ஜூலை மாதத்துக்கும் 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கும் இடையில் கிட்டத்தட்ட 3 மில்லியன் யூரோக்களை ஜேர்மனி வாழ் தமிழர்களிடமிருந்து சேகரித்து, ஆயுதம் மற்றும் பிற பொருட்களை வாங்குவதற்காக விடுதலைப் புலிகளுக்கு அனுப்பியுள்ளனர் என்று அவர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி மூவரில் விஜிகணேந்திரா என்பவர் விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு செயற்பாட்டின் பொறுப்பாளராக இருந்துள்ளதாக நம்பப்படுவதாகக் கூறிய ஜேர்மன் சட்டத்தரணிகள், இம்மூவருக்கும் எதிரான விசாரணைகள் எப்போது நடக்கும் என்பதை இன்னமும் தெரிவிக்கவில்லை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply