புனர்வாழ்வு பெற்ற 508 பேர் நாளை பெற்றோரிடம் ஒப்படைப்பு

புனர்வாழ்வளிக்கப்பட்ட 508 முன்னாள் புலி உறுப்பினர்கள் நாளை (4) தமது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சு கூறியது. இதன் போது தொழிற்பயிற்சியை பூர்த்தி செய்த 180 முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு சான்றிதழ்களும் உபகரணங்களும் வழங்கப்படவுள்ளன.

பல்வேறு புனர்வாழ்வு முகாம்களில் புனர்வாழ்வளிக்கப்பட்ட வயது குறைந்தோர், தாய்மார், உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியோர் மற்றும் அங்கவீனமுற்றோரே இவ்வாறு விடுவிக்கப்பட உள்ளதாக அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் சிவலிங்கம் சதிஷ்குமார் கூறினார்.

இந்த நிகழ்வில் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் டி. யூ. குணசேகர, பிரதி அமைச்சர் விஜிதமுனி சொய்ஸா, அமைச்சின் செயலாளர் ஏ. திசாநாயக்க, அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் எம். எல். சதிஷ்குமார், புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் சுனந்த ரணசிங்க ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

இதன் போது புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களின் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட உள்ளன. இதுவரை சுமார் 3 ஆயிரம் முன்னாள் புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply