பல தடவைகள் பரீட்சித்து தோல்வி கண்ட நிலைப்பாடு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளும் தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தின் கோரிக்கைகளும் ஒருமித்தனவாகக் காணப்படுகின்ற நிலையில் இரு தரப்பினரும் ஏன் ஒன்றிணைய முடியாது?
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட இந் திய வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவ் இக்கேள் வியைக் கேட்டிருக்கின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமை ப்பும் தமிழ்க் கட்சிகளின் அரங்கமும் நிருபமா ராவ் வைத் தனித்தனியாகச் சந்தித்துப் பேசின.
இப்பேச்சு வார்த்தைகளின் போது இவை முன்வைத்த கோரிக்கை களை ஆராய்ந்த நிலையிலேயே வெளிவிவகாரச் செய லாளர் இக்கேள்வியைக் கேட்டிருக்கின்றார்.
இதே கேள்வியை ஏராளம் தமிழ் மக்களும் தங்களிடம் அடிக்கடி கேட்கின்றனர். அரங்கத்தில் இணையுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு விடுத்த அழைப்புக்கு இதுவரை எவ்வித பதிலும் இல்லை என்று அரங்க வட் டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிறுபான்மை இனங்களுக்குத் தனித்துவமான பிரச்சினைகள் இருக்கும் நிலையில் அப்பிரச்சினைகளின் தீர்வுக்காக ஐக்கியப்படுவது வழமை. இலங்கைத் தமிழ் மக்களின் பிரதான பிரச்சினையான இனப்பிரச்சினை நீண்ட கால மாகத் தீர்வின்றி இருக்கின்றது.
இப்பிரச்சினையின் தீர்வு க்காக அரசியல் கட்சிகள் ஐக்கியப்பட வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை ஏற்பதாகக் கூறி இரண்டு தட வைகள் ஐக்கியம் ஏற்பட்டது. ஒன்று தமிழர் விடுதலைக் கூட்டணி. மற்றது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.
இவை யிரண்டும் கொள்கை மயப்பட்ட ஐக்கியம் எனக் கூறுவ தற்கில்லை. கொள்கை பற்றிக் கலந்துரையாடி உடன்பாடு காணாமலேயே இரண்டு ஐக்கியங்களும் ஏற்பட்டன. தமி ழர் விடுதலைக் கூட்டணியை அமைத்த பின்னரே தனி நாட்டுக் கோரிக்கை பற்றிய உடன்பாட்டுக்கு வந்தார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலிகளின் தேவைக்காக அவசரமாக உருவாக்கப்பட்டது. இது புலிகளின் தனிநா ட்டு நிகழ்ச்சி நிரலுக்கு விசுவாசமாகவே செயற்பட்டது. இப்போது அந்த நிகழ்ச்சி நிரலிலிருந்து விடுபட்டிருப் பது போல் தெரிகின்றது.
ஒரு பிரச்சினையின் தீர்வை மையமாகக் கொண்டு ஏற்ப டும் ஐக்கியம் தீர்வு பற்றியும் அதை அடைவதற்கான அணுகுமுறை பற்றியும் விரிவாக ஆராய்ந்த நிலையில் எட்டப்படும் உடன்பாட்டின் அடிப்படையில் அமைவதே பலன் தரும்.
தீர்வு பற்றிய சரியான கொள்கை நிலை ப்பாடு இருப்பினும் அதை அடைவதற்குப் பொருத்த மான அணுகுமுறையைப் பின்பற்றாவிட்டால் பின்னடை வுகளையே சந்திக்க நேரிடும்.
தமிழ்க் கட்சிகளின் அரங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட் டமைப்புக்குமிடையே பிரதான வேறுபாடு அணுகு முறை தொடர்பானதாகவே உள்ளது. இவற்றுக்கிடையே ஐக்கியம் ஏற்படுவதற்குத் தடையாகவும் அதுவே உள் ளது.
உடனடியாகக் கிடைக்கக் கூடிய அதிகாரங்களை முதலில் பெற்றுக் கொண்டு தொடர்ந்து முயற்சிப்பதன் மூலம் மேலதிக அதிகாரங்களைப் பெற்று இறுதித் தீர்வை அடையும் அணுகுமுறையைத் தமிழ்க் கட்சிகளின் அர ங்கம் பின்பற்றுகின்றது. இந்த அணுகுமுறையைத் தமி ழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்கவில்லை. இதுவே இவ ற்றுக்கிடையிலான பிரதான வேறுபாடு.
ஒரே தடவையில் எல்லா அதிகாரங்களையும் அல்லது மிகக் கூடுதலான அதிகாரங்களைப் பெற வேண்டும் என்ற கூட்டமைப்பின் நிலைப்பாடு பல தடவைகள் பரீ ட்சித்துத் தோல்வி கண்டது மாத்திரமன்றிப் பின்னடைவு களுக்கு வழிவகுத்ததுமாகும். கூட்டமைப்பு இந்த நிலை ப்பாட்டிலிருந்து விடுபடுவது தீர்வை நோக்கிய ஆக்க பூர்வமான நகர்வுக்கு அவசியம்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரைYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply