கிளிநொச்சிக்குச் சென்ற 60 லொறிகளை மீண்டும் வவுனியாவுக்கு கொண்டு வருவதில் தாமதம்

வவுனியாவிலிருந்து கிளிநொச்சி மாவட்டத்துக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற 60 லொறிகளை மீண்டும் வவுனியாவுக்குக் கொண்டு வருவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக வவுனியாவில் இயங்கும் வன்னிப் பகுதி இடம்பெயர் மக்களுக்கான இணைப்பு நிலைய வட்டாரங்கள் இன்று  தொவித்தன.

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள நிலை, பாதைகள் சேதம், மற்றும் வேறு சில காரணங்களால் இந்த லொறிகளை வவுனியாவுக்குக் கொண்டு வருவதில் சிரமங்கள் எதிர்நோக்கப்படுவதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கிளிநொச்சியில் தற்போது தரித்து நிற்கும் இந்த 60 லொறிகளை மீண்டும் உடனடியாக வவுனியாவுக்குக் கொண்டு வருவது குறித்து இன்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துடன் பேச்சு நடத்தப்பட்டது. இது தொடர்பாக தேவையான ஏற்பாடுகளை தாம் செய்வதாக செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் உறுதியளித்ததாகவும் தெரிவித்தன.

இதேவேளை, கிளிநொச்சிப் பகுதிக்கு இன்று காலையில் 24 லொறிகளில் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக வவுனியா வடக்குப் பிரதேச செயலாளர் பரந்ராமன் இன்று  தெரிவித்தார்.

மூன்று லொறிகளில் கிடுகுகளும் மூன்று லொறிகளில் மண்ணெண்ணெய்யும் 18 லொறிகளில் அத்திவாசியப் பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டதாக அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply