18 ஆவது அரசியல்யாப்பு சட்டமூலம் தொடர்பில் பாராளுமன்றத்தில் பெருபான்மையை பெற்றது அரசு
18 ஆவது அரசியல்யாப்பு சட்டமூலம் தொடர்பில் அரசு 161 ஆதரவான வாக்குகளை பெற்று பாராளுமன்றத்தில் 2/3 பெரும்மான்மையை பெற்றுகொண்டுள்ளது. யாப்பு திருத்தத்திற்கு எதிராக 17 வாக்குகளும் பெறப்பட்டுள்ளது. இன்றைய பாராளுமன்ற வாக்கெடுப்பின் போது, எதிர்பினைத் தெரிவித்த இருந்த ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை தமிழ்த் தேசியக் கட்சி தலைவர் உட்பட அக் கட்சியின் சில உறுப்பினர்களும் இன்று பாராளமன்றத்திற்கு சமூகமளிக்காமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்கா அரசிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் மற்றும் ஜனநாயக தேசிய முன்னணியினரும் எதிராக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply