நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் கூட்டமைப்பு சாட்சியம்
இலங்கையில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னால் சாட்சியமளிக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவின் தலைவர் இது தொடர்பில் அனுப்பிய கடிதம் கிடைத்துள்ளதாக பிபிசி-தமிழோசையிடம் கூறிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், தமிழ்த் தரப்பின் நியாயங்களை சரித்திர ரீதியாக முன்வைக்க வேண்டிய நிலையில் தாம் இருப்பதாகக் கூறினார்.
ஆணைக்குழு மீதுள்ள நம்பகத் தன்மைகளுக்கு அப்பாற்பட்டு, அதன் முன்னிலையில் சாட்சியமளிப்பதற்கான கடப்பாடு தமிழர் தரப்புக்கு இருப்பதாகவும் சம்பந்தன் தெரிவித்தார்.
சர்வதேச சமூகத்திற்கு தமிழர்களின் நிலைப்பாடு பற்றி வெளிப்படுத்துவதற்கு இந்த சாட்சியம் துணை புரியும் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறுகிறது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுக்கும் சகல நடவடிக்கைகளிலும் இந்தியாவின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள விரும்புவதாகவும் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply