அரச முகாமைத்துவ அமைச்சர் ஏஎச்எம் பௌசி தலைமையில் நடந்த கூட்டத்தில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன்

இலங்கை அரசு அபிவிருத்தித் நடவடிக்கைகள் தொடர்பாக வடக்கு கிழக்கு மாவட்டங்களில் இடம்பெறுகின்ற கூட்டங்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் இனி பங்களிக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் சுரேஸ் பிரேமச்சந்திரன் முதலாவது கூட்டத்தில் யாழ் செயலகத்தில் பங்குபற்றியிருந்தார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் இது தொடர்பாக நேற்று முன் தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நேற்றைய தினம் அரச முகாமைத்துவ அமைச்சர் ஏஎச்எம் பௌசி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த நிலையில் அங்கு சுரேஸ் பிரேமச்சந்திரனும் பங்களித்திருந்தார். அரச முகாமைத்துவ அமைச்சர் ஏஎச்எம் பௌசி மற்றும் மாவட்ட அரச அதிகாரிகள், அரச திணைக்களத் தலைவர்கள் மற்றும் இராணு உயரதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தொடரில் சுரேஸ் பிரேமச்சந்திரனும் முதன்முறையாக கலந்து கொண்டிருந்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply