யாழ். செல்லும் ஊடகவியலாளர்களுக்கு அரசு கட்டுப்பாடு விதிக்கக் கூடாது

யாழ்ப்பாணம் உட்பட வட மாகாணத்தின் அனைத்து இடங்களுக்கும் ஊடகவியலாளர்கள் சுதந்திரமாகவும் எவ்வித கட்டுப்பாடுகள் இல்லாமலும் சென்று வரக்கூடிய நிலை வேண்டும் என்று இலங்கையின் ஊடகத்துறையைச் சேர்ந்த ஜாம்பவான்களில் ஒருவ ரான மனிக் டீ சில்வா தெரிவித்தார்.

அவர் கொழும்பில் தேசிய நல்லிணக்க ஆணைக்குழு முன் ஆஜராகி வாக்குமூலம் வழங்கினார். அதன் போதே அவர் இதனைக் கூறினார்.

வடமாகாணத்துக்கு ஊடகவியலாளர்கள் செல்லவேண்டுமானால் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெறவேண்டிய நிலை இன்ன மும் இருக்கின்றது. யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்டமைக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து உள்நாட்டு, வெளி நாட்டுப் பத்திரிகைகள் எழுதவே இல்லை.

சிங்களவர்கள் காட்டுமிராண்டித்தனமான வர்கள் என்று புலிகளால் இன்றைய தலை முறையைச் சேர்ந்த தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு கற்பித்துக் கொடுத்துள்ளார்கள். இத்தவறான எண்ணம் தமிழ் இளைஞர் யுவதிகளின் மனங்களில் இருந்து நீக்கப்பட வேண்டும் தமிழ்,சிங்கள இனங்களுக்கிடையில் உண்மையில் பிரிவினை கிடையாது.

1983 ஆம் ஆண்டு கலவரத்தின்போது தமிழர்களை அதிகம் காப்பாற்றியவர்களும் சிங்களவர்கள்தான். எனவே உண்மையில் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் எந்தப்பிரச்சினையும் இல்லை.வடக்கில் யுத்தத்தால் இடம்பெயர்ந்திருக்கும் மக்களுக்கு இயல்பு வாழ்க்கையைப் பெற்றுக்கொடுக்க நாட்டின் அனைத்துப் பிரஜை களும் பங்களிப்பு வழங்கவேண்டும் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply