சீன – இந்திய போட்டியைப் பயன்படுத்தி இந்தியாவின் அழுத்தங்களை சமாளிக்கும் இலங்கை அரசு: கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்திய – சீன முரண்பாடுகளை பயன்படுத்திக் கொள்வதாக மாற்றுக் கொள்கைகளுக்கான கேந்திர நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்துள்ளார்.

இந்திய – சீன அதிகாரப் போட்டியை தூண்டி அதன் மூலம், தமிழர் பிரச்சினை குறித்த இந்தியாவின் அழுத்தங்களை இலங்கை அரசு  திசை திருப்பியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். த எகொனமிக் டைம்ஸ் ஊடகத்திற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

சிறுபான்மை மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு இந்தியா பல்வேறு வழிகளில் நடவடிக்கை எடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேற்குலக நாடுகளுக்கும் ஆசியாவிற்கும் இடையிலான முரண்பாடுகளையும், இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான போட்டித் தன்மையையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~ மிகச் சாணக்கியமாக உபயோகப்படுத்திக் கொள்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், சீனாவின் அதிகார பலத்தை தொடர்ச்சியாக பெற்றுக் கொள்ள முடியாது என்பதனை ராஜபக்ஷ அரசாங்கம் நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

அண்மைக்காலமாக இலங்கையுடன் சீனாவும் இந்தியாவும் மிக நெருங்கிய உறவுகளைப் பேணி வருகின்றது. இலங்கையின் முதன்மையான வர்த்தக பங்குதாரராக இந்தியாவும், இலங்கைக்கான பிரதான கடன் வழங்கும் நாடாக சீனாவும் திகழ்கின்றது.

மனித உரிமை பிரச்சினைகள் காரணமாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் இலங்கைக்கு வழங்கி வரும் உதவிகளை குறைத்துக் கொண்டுள்ளன எனவும் அவர் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply