பனை அபிவிருத்திக்கென ரூ. 30 மில்லியன் ஒதுக்கீடு

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பனை அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் 30 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக பாரம்பரிய கைத்தொழில் அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி தெரிவித்தார்.

அத்துடன் பனை மரங்கள் வெட்டுதலைத் தடுப்பது தொடர்பில் கடுமையான சட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட மாவட்ட, பிரதேச செயலாளர்களுக்கும் சுற்று நிருபங்களை அனுப்பிவைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் பத்தாண்டுத்திட்டத்தின் மூலம் தற்போது 11 மில்லியனாக உள்ள பனை மரங்களை 16 மில்லியனாக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதுடன் இதற்கிணங்க யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் அடுத்த மாதம் எட்டு மில்லியன் பனங் கொட்டை களைப் பயிரிட தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது யாழ்ப்பாணத்தில் 3.5 மில்லியன், பனைமரங்களும், கிளிநொச்சியில் 3.5 மில்லியன், மன்னாரில் 3 மில்லியன் பனை மரங்களும் உள்ளன. இவற்றைப் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

இதற்கிணங்க பனை மரம் தரிப்பதை முற்றாகத் தடை செய்யும் விவசாய அமைச்சின் சுற்றறிக்கையைக் கடுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அவசிய தேவைகளுக்காக பனை மரம் தேவைப்படுவோர் சம்பந்தப்பட்ட பிரதேச மாவட்டச் செயலாளர்களுக்கூடாக பனை அபிவிருத்திச் சபையின் அனு மதி பெற்றே மரங்களைத் தரிக்க முடியுமென்ற கட்டளையும் பிறப் பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply