அவுஸ்ரேலியாவுக்குச் செல்பவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது

உலகளாவிய ரீதியில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலிருந்து தொழில்சார் திறன் விசாவைப் பெற்று அவுஸ்ரேலியாவுக்குச் செல்பவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 
 
குறிப்பாக சிகையலங்காரம் மற்றும் சமையல் கலை போன்றவற்றைப் பயின்று அதனைக்கொண்டு அவுஸ்ரேலியாவுக்கு தொழில்சார் திறன் விசாவைப் பெறுபவர்கள் பாதிக்கப்படும் அபாயம் தோன்றியுள்ளது. இதில் இலங்கையிலிருந்து செல்பவர்களும்; உள்ளடங்குவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொழில்சார் திறன் விசாவை வழங்குவது குறித்த தமது கொள்கையை மீள்பரிசீலனை செய்து அதனை மாற்றியமைப்பதற்கு அவுஸ்ரேலிய குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் தீர்மானித்தமையே இதற்கான காரணம் எனக் கூறப்படுகிறது.

உலகளாவிய ரீதியில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நிலமைகள் காரணமாக மருத்துவம், தொழில்நுட்பம்,  பொறியியல் மற்றும் கட்டடத்தொழில் போன்ற துறைகளில் கூடுதல் கவனம் செலுத்தி அந்தத் துறைகளுக்கு தொழில்சார் திறன் விசா அனுமதியை வழங்குவது தொடர்பாக அவுஸ்ரேலிய அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.

இதனால், சிகையலங்காரம், சமையல்கலை போன்றவற்றைக் கற்று அவுஸ்ரேலியா சென்று நிரந்தர வதிவிட உரிமையைப் பெறவிரும்பும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மீளாய்வு நடவடிக்கை அடுத்த ஆறு மாதங்களுக்கு நடைமுறைப்படுத்தப்படும் என அவுஸ்ரேலியாவின் குடிவரவு மற்றும் பிரஜாவுரிமைகள் விவகார அமைச்சர் கிரிஸ் இவான் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply