அவுஸ்ரேலியாவுக்கான தூதுவராக இலங்கை கடற்படைத் தளபதி
இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திசார சமரசிங்க அவுஸ்ரேலியாவுக்கான தூதுவராக நியமிக்கப்படலாம் என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் பலவற்றில் தூதுவர் பதவிகள் வெற்றிடமாக உள்ளன. இவற்றுக்கு புதியவர்களை நியமிப்பதற்கான முன்பணிகள் ஆரம்பமாகியுள்ளது. அவுஸ்ரேலியாத் தூதுவர் பதவிக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திசார சமரசிங்கவே போட்டியில் முன்னணியில் இருக்கிறார்.
எதிர்வரும் டிசம்பர் மாதம் ஓய்வுபெறவுள்ள அவர் அவுஸ்ரேலியாவுக்கான தூதுவராக பெரும்பாலும் நியமிக்கப்படலாம் என்று தெரியவருகிறது.
அதைவிட இலங்கையில் இருந்து படகுகள் மூலம் அகதிகள் செல்வதைக் கட்டுப்படுத்துவதற்கும் இந்த நியமனம் பெரிதும் உதவியாக அமையும் என்று இலங்கை அரசாங்கம் கருதுவதாகதவும் தெரிகிறது.
அதேவேளை, தயான் ஜெயதிலக பிரான்ஸ் நாட்டுக்கான தூதுவராகவும், தற்போது தென்கொரியாவில் பணியாற்றும் அசித பேரேரா இத்தாலிக்கான தூதுவராகவும், இலங்கை முஸ்லிம் காங்கிரசை சேர்ந்த ஒருவர் சவுதி அரேபியாவுக்கான தூதுவராகவும் நியமிக்கப்படலாமென தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் அவுஸ்ரேலியாவுக்கான தூதுவராக நியமிக்கப்படலாம் என்று பெயர் அடிபடுபவர்களில் முன்னாள் அமைச்சர் பெரியல் அஸ்ரப்பும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply