நல்லிணக்க ஆணைக்குழுவின் வட பகுதிக்கான இறுதி அமர்வுகள்
படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் வட பகுதிக்கான இறுதி அமர்வுகள் நேற்று இடம்பெற்றன. இந்த ஆணைக்குழு நேற்று முல்லைத்தீவில் இரு அமர்வுகளை நடத்தி இருந்தது.
இதேவேளை, படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஜனாதிபதி ஆணைக்குழு நேற்று கிளிநொச்சி கண்டாவலை பிரதேச செயலகத்தில் அமர்வுகளை நடத்தியது.
இதன்போது, கிளிநொச்சி, பரந்தன், பூநகரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 350 பொது மக்கள் சாட்சியமளிக்க வருகைத் தந்தனர். காணாமல் போனமை, சட்டவிரோத ஆட்கடத்தல், கொலை, பொருட் கொள்ளை, காணிப்பிரச்சினை உள்ளிட்ட 9 பிரச்சினைகள் குறித்து படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிடம் பொது மக்கள் முறைபாடு செய்துள்ளனர்.
இந்தப் பிரச்சினைகளை கவனத்தில் கொண்ட படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு குறிப்பிட்ட சில பிரச்சினைகளுக்குத் தீர்வினைப் பெற்றுக் கொடுத்ததுடன், ஏனைய பிரச்சினைகளுக்கான தீர்வுகள் விரைவில் பெற்றுக் கொடுக்கப்படுமென உறுதியளித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply