முல்லைத்தீவு கடற்பரப்பில் கடற்படை, கடற்புலிகள் மோதல்

முல்லைத்தீவு கடற்பரப்பில் கடற்படையினருக்கும், கடற்புலிகளுக்குமிடையில் மோதல்கள் நடைபெற்றுள்ளன. முல்லைத்தீவிலிருந்து வடகிழக்காக 70 கடல்மைல் தொலைவிலேயே இந்த மோதல்கள் நடந்துள்ளன.
 
இன்று சனிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் இரு தரப்புக்குமிடையில் நடந்த மோதல்களில் போர் தளபாடங்களை ஏற்றிச் சென்ற கடற்புலிகளின் 4 படகுகளை கடற்படையினர் அழித்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

கடல்ரோந்துப் பணிகளில் ஈடுபட்டிருந்த கடற்படையினரின் படகுகள் கடற்புலிகளின் படகுகளைக் கண்ணுற்றதும் அவற்றின் மீது தாக்குதல் நடத்தியதாகவும். இரு தரப்புக்கும் இடையில் சுமார் 30 நிமிட நேரம் மோதல்கள் நடந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த மோதலில் கடற்புலிகளின் 4 படகுகள் தப்பிச் சென்றதாகவும், அவற்றை கடற்படையினர் வழிமறித்துத் தாக்கியிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இன்று நடைபெற்ற மோதல் சம்பவம் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பில் எந்தவிதமான அறிவித்தல்களும் விடுக்கப்படவில்லை.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply