முல்லைத்தீவு மாவட்டத்தில் 50,000 பேர் மீள்குடியமர்வு, மேலும் 44 ஆயிரம் குடும்பங்களை குடியமர்த்த துரித நடவடிக்கை

முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை 50,000 பேர் மீள் குடியேற்றப்பட்டுள்ளனர். மேலும் 44,000 பேரை மீள் குடியேற்றுவதற்கான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகம் தெரிவித்தார்.

விஸ்வமடு கிழக்கில் அடுத்த வாரம் 400 குடும்பங்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் மிதி வெடிகள் அகற்றிவரும் பிரதேசங்களில் படிப்படியாக மீள் குடியேற்றம் செய்யப்பட்டு வருகின்றது.

இதன்படி யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வவுனியா நலன்புரிக் கிராமங்களில் உள்ள முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் 24,000 பேர் மீள் குடியேற்றப்படவுள்ளதுடன் நலன்புரி நிலையத்துக்கு வெளியில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் மேலும் 20,000 பேர் தங்கியுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply