கிழக்கு மாகாணத்தில் சுய தொழில் பயிற்ச்சித் திட்டங்கள் விநாயகமூர்த்தி முரளிதரன் எம்.பி நடவடிக்கை
கிழக்கு மாகாணத்தில் சுய தொழில் பயிற்ச்சித் திட்டங்களை கூடியளவில் ஏற்டுத்தி வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பை வழங்குவதற்கான முன்னேற்ப்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மாகாணப் பணிப்பாளர் பொன் செல்வநாயகம் தலைமையிலான சக உத்தியோகத்தர்களை கடந்த 17 ஆம் திகதி தேனகத்தில் சந்தித்து கிழக்கு மாகாண இளைஞர், யுவதிகளின் தொழில் வாய்ப்பு உள்ளிட்ட வேறு பல விடயங்களையும் கலந்துரையாடினார்.
இச் சந்திப்பின் போது விவசாயம், கைத்தொழில், அழகியற்க்கலை உள்ளிட்ட பல்வேறு தொழில்த் துறைகளிலும் சுய தொழில் பயிற்ச்சித் திட்டங்களை கூடியளவில் ஏற்படுத்தி வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு சுய தொழில் வாய்ப்பை வழங்குவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்க இணக்கம் காணப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply