தமிழ் அரசியல் தலைவர்கள் மக்களைத் தவறாக வழி நடத்திவிட்டனர்

தமிழ் அரசியல் தலைவர்கள் மக்க ளைத் தவறாக வழி நடத்திவிட்ட தாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவர்களைச் சரியாக வழிநடத்தி ஒன்றுபடுத்துவாரெனத் தாம் திடமாக நம்புவதாக நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த வன்னி மக்கள் தெரிவித்தனர்.

அரசியலமைப்பில் திருத்தங்களைச் செய்யக் கூடிய பெரும்பான்மை பலத்தை ஜனாதிபதி கொண்டிருக்கிறார். எனவே, இந்தப் பிரச்சி னையைத் தீர்ப்பதற்கும் ஜனாதி பதியால் முடியும் என்றும் பூநகரியில் சாட்சியமளித்த விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தரான நடராசா சுந்தரமூர்த்தி தெரிவித்தார்.

புலிகளின் பிடியிலிருந்து மீண்டு வந்தபோது தமக்கு ஏற்பட்ட அனுபவங்களை விபரித்த அவர், மக்களைத் தவறாக வழிநடத்தி யவர்கள் தண்டிக்கப்பட வேண்டு மெனக் கோரிக்கை விடுத்தார்.

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழுவின் பகிரங்க அமர்வு பூநகரி பிரதேச செயலகத்தில் அண்மையில் நடைபெற்றபோது சாட்சி யமளித்த சுந்தரமூர்த்தி ஆணைக்குழுவின் தலைவரும் உறுப்பினர்களும் எழுப்பிய கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.

அவர் மேலும் சாட்சியமளிக்கையில், “நாம் இலங்கையர்களாக வாழ வேண்டு மாயின் எமக்கு உரிமைகள் வேண்டும். சமூக, கலாசார, பொருளாதார உரிமைகள் வழங்கப்பட வேண்டும். எமது அரசிய லமைப்பில் இன, மத சார்பு அல்லாத நாடாகப் பிரகடனப்படுத்த வேண்டும்.

அப்போது தான் ஐக்கிய இலங்கையைக் கட்டியெழுப்ப முடியும். இலங்கையின் தன்னாதிக்க இறைமையில் எமக்கும் பங்கு தேவை. ஜே. ஆர்., பிரேமதாச, சந்திரிகா ஆகியோர் தீர்வொன்றைக் கண்டிருந்தால் வன்னி மக்கள் இந்தத் துன்பத்தை அனுபவித்திருக்க மாட்டார்கள்.

எங்கள் தலைவர்களான அமிர்தலிங்கம், சம்பந்தம் ஆகியோரும் எம்மைத் தவறாக வழிநடத்தி உள்ளார்கள். எமது தமிழ்த் தலைவர்களை ஒன்றுபடுத்த ஜனாதிபதியால் முடியும். நாம் இனிமேலாவது நிம்மதியாக வாழ இந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகள் வழிவகுக்கும் என நம்புகிறேன்.

என் இளம் பராயத்தில் சன்சோனி ஆணைக்குழு விசாரணைகளைப் பார்த்திருக்கிறேன். அதன் பின்னர் பல குழுக்கள் அமைக்கப்பட்டன. ஆனால், எந்தப் பயனும் ஏற்படவில்லை. அந்த நிலை இந்தக் குழுவுக்கு ஏற்பட்டு விடக் கூடாது” என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply