இலங்கை உட்பட பல நாடுகளில் இன்டர்நெட் பாதிப்பு
சுயஸ் கால்வாய் வழியாக மத்திய தரைக் கடலின் அடியால் செல்லும் கேபிள்களில் சேதம் ஏற்பட்டிருப்பதால் ஆசியா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இன்டர்நெட் சேவைகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் தொலைத்தொடர்புசேவைகளும் பாதிப்படைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. கடலுக்கடியில் செல்லும் கேபிள்களில் 4 கேபிள்கள் சேதமடைந்திருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த சேதத்தால் இந்தியாவில் 65 சதவீதமான இன்டர்நெட் பாவனையாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பதுடன், இன்டர்நெட் மூலமான சேவைகளை வழங்கிவரும் இந்திய நிறுவுனங்கள் சிலவற்றுக்கு தற்காலிகமாக விடுமுறை வழங்கப்பட்டிருப்பதாகவும் இந்தியச் செய்திகள்தெரிவிக்கின்றன.
இதனைவிட இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, சவூதி அரேபியா, எகிப்து, தைவான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலும் இன்டர்நெட் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
கேபிள்கள் சேதமடைந்ததற்கான காரணம் கண்டறியப்படாதபோதும், கேபிள்கள் சேதமடைந்ததற்கு சில நிமிடங்களுக்கு முன்பு மால்டா அருகே நிலநடுக்கம் ஏற்பட்டதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply