முல்லைத்தீவிலிருந்து 13பேர் படகில் தப்பிவந்து படையினரிடம் தஞ்சம்!
விடுவிக்கப்படாத முல்லைத்தீவு பிரதேசத்திலிருந்து ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 13பேர் திருமலை புல்மோட்டையிலுள்ள கடற்படையினரிடம் தஞ்சமடைந்துள்ளனர் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இச்சம்பவம் நேற்றுக்காலை இடம்பெற்றுள்ளது. இவர்களில் ஒன்பது ஆண்களும், மூன்று பெண்களும் ஒரு குழந்தையும் அடங்குகின்றனர். இவர்கள் முல்லைத்தீவு வெற்றிலைக்கேணி பகுதியின் ஊடாக படகில் தப்பி வந்ததாக தெரிவித்துள்ளனர்.
இவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு நலன்புரி நிலையத்தில் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply