முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்தம் கொடுப்பனவு வழங்கும் தீர்மானத்திற்கு செல்வம் அடைக்கலநாதன் வரவேற்பு
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்தம் கொடுப்பனவுகளை வழங்கும் பொருட்டு சிறுவர் நம்பிக்கை நிதியம் ஒன்றை ஸ்தாபிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகாரத்துறை அமைச்சர் எம்.எல்.ஏ.ஏம். ஹிஸ்புல்லாஜ் தெரிவித்த கருத்தை தாம் வரவேற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இந்த நிதியத்திற்கு சேவ்த சில்ரன் முதற்கட்டமாக 100 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளதாகவும் ஏனைய தன்னார்வ தொண்டர் அமைப்புக்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்களிடம் இருந்தும் இதற்கான நிதியை மேலும் பெற உத்தேசித்துள்ளதாகவும் அமைச்சர் எம்.எல்.ஏ.ஏம்.ஹிஸ்புல்லாஜ் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக தமது அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதாகவும் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து அங்கீகாரம் பெறப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் வடக்கிலும் பல நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் எவ்வித கொடுப்பனவுகள் எதுவும் இன்றி முன்பள்ளி ஆசிரியர்களாக தம்மை அர்ப்பணித்து வருகின்றனர். இத்திட்டம் கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளுவது போன்று வடக்கிலும் மேற்கொள்ள வேண்டும் என்றும் வடக்கில் உள்ள முன்பள்ளி ஆசிரியர்களும் இந்த மாதாந்த கொடுப்பனவை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதன் அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஜிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply