புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் பிராந்திய அலுவலகம் வவுனியாவில் திறந்து வைப்பு
வவுனியாவில் பிராந்திய அலுவலகமொன்று இன்று புதன்கிழமை காலை 9.30 மணிக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா அரசாங்க அதிபர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் தமிழ் மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்துள்ளர்.
புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.யூ. குணசேகர மேற்படி அலுவலகத்தை திறந்து வைத்ததாகவும் அவர் கூறினார்.
வடக்கு, கிழக்கு மக்கள் தமது தேவைகளுக்காக இந்த அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளலாம் என்பதுடன், யுத்தத்தின்போது ஏற்பட்ட பாதிப்புக்களுக்கான நஷ்டடு மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் இந்த அலுவலகத்திலிருந்தே இனிமேல் மேற்கொள்ளப்படும் எனவும் பி.எஸ்.எம் சார்ள்ஸ் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply