தமிழ் மக்களின் அழிவிற்கு ஐக்கிய தேசிய கட்சியே காரணம்

தமிழ் மக்களின் அழிவிற்கும் அவல வாழ்க்கைக்கும்  அரசாங்கம் மாத்திரம் காரணமல்ல எனவும் பிரதான பாத்திரம் ஐக்கிய தேசிய கட்சியே தான். அன்று ஐக்கிய தேசிய கட்சி தீர்வினை முன் வைத்திருந்தால் இன்று இவ்வாறானதோர் நிலை உருவாகியிருக்காது என தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தமிழ் மக்கள் தொடர்பாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கைக்கு பதிலளித்து இன்று  புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.  

அன்று அவ்வாறு தமிழ் மக்களை ஏமாற்றிய ஐக்கிய தேசிய கட்சி இன்று தமிழ் மக்களின் போராட்டம் முடிந்து விட்டதாக அறிக்கை விடுவது விந்தையானதாகும் எனவும்  பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலை புலிகளின் அழிவுடன் தமிழ் மக்களின் பிரச்சினைகள் முடிந்து விட்டதாக திஸ்ஸ அத்தநாயக்காவினால் எவ்வாறு கூறமுடியும் என கேள்வியெழுப்பிய அவர், புலிகளின் ஆயுதப் போராட்டம் தோல்வியில் முடிந்ததை நாங்கள் அங்கீகரிக்கின்றோம். ஆனால், தமிழ் பேசும் மக்களின் அரசியல் தீர்வுக்கான போராட்டம் இன்னும் முடிவடையவில்லை. இந்த ஜனநாயக போராட்டத்தின் வெற்றியில் தான் தமிழ் பேசும் மக்களின் எதிர்காலம் தங்கியுள்ளது. இந்த சூழ்நிலையில் அத்தநாயக்க போராட்டத்தின் முடிவுடன் எல்லாம் முடிந்து விட்டதாக கூறுவது எந்த வகையில் நியாயமாகும் எனவும் அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply