புகைப்போர்க்கு கூடுதல் வட்டி அறவீடு
புகையிலை பழக்கத்தை ஒழிப்பதற்கும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் குஜராத்திலுள்ள கூட்டுறவு வங்கி நூதன விதிகளை கடைப்பிடித்து வருகிறது. புகையிலைப் பயன்பாட்டிற்கு எதிராக பல்வேறு வகையில் பிரசாரம் செய்யப்பட்டாலும், அதை யாரும் பொருட்படுத்துவதில்லை. மாறாக புகையிலைப் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புகையிலைப் பழக்கத்தால் சர்வதேச அளவில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் பலியாகின்றனர்.
இந்த நிலையில் புகையிலைப் பயன்பாட்டை ஒழிக்க குஜராத்தில் உள்ள ராஜ்கோட் கூட்டுறவு வங்கி அதிரடி வழிமுறைகளை கையாண்டு வருகிறது. வங்கியில் கடன் கேட்கும் வாடிக்கையாளருக்கு, புகையிலை பயன்படுத்தும் பழக்கம் இருந்தால், அவரிடமிருந்து கூடுதலாக 1 சதவீதம் வட்டி வசூலிக்கப்படுகிறது. மேலும் புகையிலை பயன்படுத்தும் ஊழியரை வேலை விட்டு அனுப்பவும் தயங்குவதில்லை இந்த வங்கி.
இது குறித்து வங்கியின் தலைவர் ஷாம்ஜி குட் கூறியதாவது: புகையிலை பயன்படுத்தும் வாடிக்கையாளரிடமிருந்து ஒரு சதவீதம் கூடுதல் வட்டி வசூலிக்கும் விதிமுறை கடந்த இரண்டரை ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதுவரை ஒரே ஒரு வாடிக்கையாளர் மட்டுமே, ஒரு சதவீத கூடுதல்வட்டி வசூலித்தாலும் பரவாயில்லை; புகையிலை பழக்கத்தை விட முடியாது எனக் கூறிவிட்டார்.
தவிர, எங்களது வங்கியில் புகையிலை பயன்படுத்தும் நபரை ஊழியராக நியமிப்பதில்லை. ஊழியருக்கு புகையிலை பழக்கம் இருப்பது தெரிந்தால், அவரை வேலை விட்டு நீக்க முடியும். இந்த விதி சாதாரண ஊழியருக்கு மட்டுமல்ல, வங்கியின் இயக்குனருக்கும் பொருந்தும். மேலும், சமீபத்தில் புதிய கிளை துவங்குவதற்காக 30 ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். இதில் புகையிலை பழக்கம் இல்லாதவருக்கு முன்னுரிமை அடிப்படையில் வேலை வழங்கப்பட்டது. இவ்வாறு ஷாம்ஜி குட் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply