இரண்டு வாரத்துக்குள் வன்னியில் 6 மாதத்துக்குட்பட்ட 3 குழந்தைகள் உயிரிழப்பு
வன்னி மக்கள் முன்னொருபோதும் எதிர்நோக்காதளவு அவலங்களை எதிர்கொண்டிருப்பதாக மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் தெரிவித்தார்.
வவுனியா பெரிய கோமரசங்குளம் பகுதியில் புதிதாக புனரமைப்பு செய்யப்பட்ட பரலோக மாதா தேவாலயத்தினை இன்று சனிக்கிழமை திறந்துவைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியிருந்தார்.
வன்னிப் பகுதியில் தற்போது நடந்துவரும் யுத்தம் காரணமாக சுமார் 3 அரை லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட மன்னார் ஆயர், நத்தார் பண்டிகையை முன்னிட்டு மோதலில் ஈடுபட்டிருக்கும் இரண்டு தரப்பினரையும் குறைந்தது ஒரு வாரத்துக்காவது போர்நிறுத்தம் செய்யுமாறு தான் உள்ளிட்ட ஆயர்கள் இணைந்து கோரிக்கை விடுத்திருந்ததாகத் தெரிவித்தார்.
எனினும், இந்தக் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது என்பதை ஊடகங்கள் மூலம் தான் அறிந்துகொண்டதாக மன்னார் ஆயர் தனது உரையில் குறிப்பிட்டார்.
மிகவும் பழமையான பெரிய கோமரசங்குளம் தேவாலயம் தற்போது அந்த பகுதி மக்களாலும் ஆயரினால் வழங்கப்பட்ட 22 இலட்சம் ரூபா நிதியுதவி மற்றும் பல நன்கொடையாளிகளின் உதவியுடன் இந்தத் தேவாலயம் புனரமைக்கப்பட்டுள்ளது.
இரண்டு வாரத்துக்குள் வன்னியில் 6 மாதத்துக்குட்பட்ட 3 குழந்தைகள் உயிரிழப்பு
இதேவேளை, வன்னியில் நடத்தப்படும் தாக்குதல்களில் கடந்த இரண்டு வாரகாலப்பகுதியில் 6 மாதத்திற்குட்பட்ட 3 குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக அண்மையில் வன்னிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த மன்னார் ஆயர் கூறினார்.
வன்னியிலுள்ள 3 இலட்சத்துக்கும் அதிகமான மக்களில் பெரும்பாலானவர்கள் 15 தடவைக்கு மேலாக இடம்பெயர்ந்திருப்பதாக மன்னாரில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற மற்றுமொரு நிகழ்வில் உரையாற்றும்போது தெரிவித்தார்.
வன்னி மோதல் சம்பவங்களினால் ஏற்பட்டு வருகின்ற இடப்பெயர்வுகள், மற்றும் எறிகணை வீச்சுக்கள் விமானத் தாக்குதல்கள் காரணமாக கர்ப்பிணத் தாய்மார்கள், கைக்குழந்தைகள் அதிர்ச்சிக்குள்ளாகிவரும் நிலையைத் தாம் நேரில் கண்டதாக அவர் குறிப்பிட்டார்.
தொடரும் உக்கிர மேதல்களால் வன்னிப்பிராந்திய மக்கள் நிவாரணங்களுக்காக நடைபிணங்களாக அலைந்து திரிவதையும் அவதானிக்க முடிந்ததாக மன்னார் ஆயர்இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply