தமிழ் மக்கள் விடுதலைக் கூட்டணி: கருணாவின் புதிய கட்சி
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியிலிருந்து பிரிந்துசென்ற கருணா அம்மான், தமிழ் மக்கள் விடுதலைக் கூட்டணி என்ற புதிய அரசியல் கட்சியொன்றை உருவாக்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விடயம் தொடர்பாகத் தமக்கும் தகவல் கிடைத்திருப்பதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் செயலாளர் கைலேஸ்வரராஜா கொழும்பு ஊடகமொன்றிடம் கூறினார்.
கருணா அம்மான் புதிய அரசியல் கட்சியொன்றை உருவாக்கியிருப்பதாக எமக்கும் தகவல் கிடைத்துள்ளது. எனினும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளில் எந்த மாற்றமும் இல்லை. பிள்ளையான் அதன் தலைமைப் பொறுப்பில் தொடர்ந்தும்; இருப்பார்” என அவர் தெரிவித்துள்ளார்.
கருணா அம்மானால் உருவாக்கப்பட்டிருக்கும் புதிய கட்சியின் விலாசம் மட்டக்களப்பிலுள்ள தேனகம் என கொடுக்கப்பட்டிருப்பதாக அந்த ஊடகம் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
புதிய கட்சி உருவாக்கம் பற்றியும், தனது நடவடிக்கை குறித்தும் கருணா அம்மான் தனது ஆதரவாளரான கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பிரதீப் மாஸ்டருக்கு அனுப்பிவைத்திருப்பதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருணாவால் உருவாக்கப்பட்டிருக்கும் புதிய கட்சியின் ஊடகப் பேச்சாளராக காங்சனா மூர்த்திகமலநாதன் என்பவர் அந்தக் கடிதத்தில் கையொப்பம் இட்டிருப்பதாகவும், செயலாளராக விநயபாரதியும், செயலாளராக சின்னத்தம்பியும் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருணா அம்மானுக்கும், பிள்ளையானுக்கும் இடையில் தொடர்ந்தும் இழுபறி நிலை காணப்பட்டுவந்த நிலையிலேயே கருணா அம்மான் புதிய கட்சியை உருவாக்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply