பாகிஸ்தானில் நவாஸ் செரீப், ஜனாதிபதி ஆக ஆதரவு ஆய்வில் தகவல்
பாகிஸ்தானில் ஆசிப் அலி சர்தாரிக்குப் பதில் நவாஸ் செரீப்பே ஜனாதிபதியாக 59 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். 19 சதவீதம் பேர் மட்டுமே சர்தாரிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
சர்தாரியின் செயல்பாடுகள் திருப்தி இல்லை என்று 63 சதவீதம் பேரும், திருப்தியாக இருப்பதாக 19 சதவீதம் பேரும் தெரிவித்து உள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் பாகிஸ்தான் மக்களிடையே நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.பாகிஸ்தான் தற்போது தவறான பாதையில் போய்க் கொண்டு இருக்கிறது என்று 88 சதவீதம் பேர் தெரிவித்து உள்ளனர். கடந்த காலங்களை விட பொருளாதார நிலைமை மோசமாக உள்ளது என்று 73 சதவீதம் பேர் தெரிவித்து உள்ளனர்.
முக்கியமான பிரச்சினைகளில் இப்போதைய பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைமையிலான அரசின் செயல்பாடுகள் மோசமாக இருப்பதாக 76 சதவீதம் பேரும், ஜனநாயக முறையில் தேர்ந்து எடுக்கப்பட்ட பாராளுமன்றம் மற்றும் ஜனாதிபதியின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லை என்று 67 சதவீதம் பேரும் தெரிவித்து உள்ளனர்.
நாடு எதிர்நோக்கி உள்ள பிரச்சினைகளை கையாள்வதில் நவாஸ் செரீப் சிறந்தவர் என்று 31 சதவீதம் பேரும், சர்தாரி சிறந்தவர் என்று 8 சதவீதம் பேரும், பர்வேஸ் முஷரப் சிறந்தவர் என்று 3 சதவீதம் பேரும் தெரிவித்து உள்ளனர்.
64 சதவீதம் பேர் பெனாசிர் பூட்டோவை விரும்புவதாகவும், 60 சதவீதம் பேர் நவா ஸ் செரீப்பை விரும்புவதாகவும், 65 சதவீதம் பேர் சர்தாரியை விரும்ப வில்லை என்றும் தெரிவித்து உள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply