இராணுவத்தின் செயலணி-IV நெடுங்கேணியை அடைந்தது.
முல்லைத்தீவு மாவட்டம் நெடுங்கேணிப் பகுதியை இராணுவத்தினரின் செயலணி-IV கைப்பற்றியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. நேற்று சனிக்கிழமை காலை முதல் இராணுவத்தினர் நடத்திய வெற்றிகரமான தாக்குதல்கள் மூலம் நெடுங்கேணியை கைப்பற்றியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அதேநேரம் புலிகளுக்கும், இராணுவத்தினருக்கும் இடையில் கிளிநொச்சியில் கடும் மோதல்கள் தொடர்ந்து வருவதாகவும், இதில் இரண்டு தரப்புக்கும் இழப்புக்கள் ஏற்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தினரின் 57வது படைப்பிரிவுக்கும், புலிகளுக்கும் இடையில் நேற்று காலை 6 மணிக்கும் பின்னர் மாலை 6 மணிக்கும் இரணைமடு வடக்குப் பகுதியில் கடும் மோதல்கள் நடந்ததாகக் குறிப்பிட்டிருக்கும் பாதுகாப்பு அமைச்சு, இந்த மோதல்களில் 12 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், 16 பேர் காணாமல் போயிருப்பதாகவும், 34 பேர் காயமடைந்திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்றைய மோதல்களில் புலிகளுக்குக் கடும் இழப்புக்கள் ஏற்பட்டமை அவர்களின் தொலைத்தொடர்பு கருவிகளை ஒட்டுக்கேட்டதன் மூலம் அறிந்துகொண்டதாக பாதுகாப்பு அமைச்சு கூறுகிறது. அதேநேரம், கிளிநொச்சி மாவட்டம் இரணைமடு பகுதியில் இராணுவத்தினருடன் நடந்த மோதல்களில் 60 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், 150 பேர் காயமடைந்திருப்பதாக புலிகளின் வட்டாரங்களை மேற்கோள்காட்டி இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புலிகளின் தாக்குதல்கள் காரணமாக இரணைமடுவில் இராணுவத்தினர் கைப்பற்றிய பகுதியிலிருந்து 2 கிலோ மீற்றர் தூரம் பின்நோக்கித் தள்ளப்பட்டிருப்பதாக அந்தச் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply