புலிகளின் கட்டுப்பாட்டை மீறி 37 பொதுமக்கள் பாதுகாப்புத்தேடி ஒத்தியமலைக்கு வந்துள்ளனர்
முல்லைத்தீவு மாவட்டத்தின் நெடுங்கேணி, ஒத்தியாமலை பிரதேசங்களிலிருந்து 37 பொதுமக்கள் நேற்று (20) மாலை வரை இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் வந்ததாகப் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் இன்று (21) தெரிவித்தது. இவர்களில் 11 பேர் நெடுங்கேணியிலிருந்தும் 26 பேர் ஒத்தியாமலைப் பிரதேசத்திலிருந்தும் வந்துள்ளனர்.தற்போது இவர்கள் அனைவரும் வவுனியாவிலுள்ள இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இராணுவத்தினரின் 58 ஆவது படைப் பிரிவு வடக்கு அம்பகாமம் பகுதியில் நடத்திய தாக்குதலின் போது புலிகளுக்குப் பலத்த இழப்பு ஏற்பட்டதாக ஊடக மத்திய நிலையம் மேலும் தெரிவித்தது. பின்னர் நடத்தப்பட்ட தேடுதலின் போது புலிகளின் இரண்டு சடலங்களைப் படையினர் கைப்பற்றினர்.
நேற்று மாலை குமுளமுனை பிரதேசத்தில் படையினருடன் இடம் பெற்ற மோதலின் போதும் புலிகளுக்கு அதிக இழப்புகள் ஏற்பட்டதாகவும் புலி உறுப்பினரொருவரின் சடலம் மீட்கப்பட்டதாகவும் அந்த நிலையம் மேலும் தெரிவித்தது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply