முஸ்லிம்களுக்கெதிரான அடக்குமுறையை பிரான்ஸ் நிறுத்த வேண்டும் : பின்லேடன்
பிரஜைகளைக் கொலை செய்து தனது பழியைத் தீர்க்கவுள்ளதாக அல்-கொய்தா இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடன் தெரிவித்தார். அல்ஜெசீரா ஊடக நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஒலி நாடாவிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஆப்கானில் இடம்பெற்று வரும் யுத்தத்திற்கு பிரான்ஸ் தொடர்ச்சியாக அமெரிக்காவுக்கு உதவி வருகின்றது.
“எவ்வாறு எங்கள் தாய்நிலத்தில் மாற்றான் ஆக்கிரமிப்பு நடத்த முடியும்? மற்றும் எங்கள் நாட்டு முஸ்லிம் பெண்கள், குழந்தைகள் கொல்லப்படுவதற்குப் பிரான்ஸே ஆதரவளிக்கின்றது. மேலும் முஸ்லிம் பெண்கள் தங்கள் மார்க்கத்தின் பிரகாரம் முகத்தினை மறைப்பதற்காக அணியும் பர்தாவையும் பிரான்ஸ் தடைசெய்யவுள்ளது.
கடந்தமாதம் நைஜரில் வைத்து 5 பிரான்ஸ் வாசிகள் கடத்தப்பட்டனர். முஸ்லிம்களுக்கெதிரான அடக்குமுறைகளின் எதிரொலியாகவே இந்தக் கடத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறான தாக்குதலைத் தவிர்க்க வேண்டுமாயின், உடனடியாக அமெரிக்காவுக்கு ஆதரவளிப்பதைப் பிரான்ஸ் நிறுத்திக் கொள்ள வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply