உலக உணவுத் திட்டத்தின் நிவாரண விநியோகம் தடைப்படும் அபாயம்

இடம்பெயர்ந்துள்ள மக்களுக்குரிய நிவாரண உதவிகளை வழங்கி வருகின்ற உலக உணவுத் திட்டத்திற்கு கொடையாளர்களிடமிருந்து கிடைக்கின்ற நிதியுதவியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக நிவாரண உணவு விநியோக நடவடிக்கைகள் இறுக்கமடைந்துள்ளதாக அந்த நிறுவனம் கூறியிருக்கின்றது.

இந்த நிதிச்சோர்வினால் இலங்கையில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு நிவாரணமாக வழங்கப் படுகின்ற கோதுமை மா மற்றும் சீனி ஆகிய உணவுப் பொருட்களில் 50வீதத்தைக் குறைக்க வேண்டிய கட்டாய நிலைமை ஏற்பட்டிருப்ப தாகவும். உலக உணவுத் திட்டம் கூறியிருக்கின்றது.

இதனால் 2இலட்சத்து 80ஆயிரம் பேர் பாதிக்கப்படுவார்கள் என்று தெரி விக்கப்பட்டிருக்கின்றது. உலக உணவுத்திட்டத்திற்கான நிதியுதவியில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் வரும் ஜனவரி மாதம் தொடக்கம் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்ற போசாக்கு உணவு விநியோகத்திலும் பாதிப்பு ஏற்படும்.

இந்த நிலையில் யாழ்.மாவட்டத்தில் உறவினர், நண்பர்களுடன் வசித்து வருகின்ற இடம்பெயர்ந்த மக்களும் தமது உணவுத் தேவையை பூர்த்தி செய்வதில் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கியிருப்பதாக உலக உணவுத் திட்டம் தெரிவிக்கின்றது. அந்த மக்கள் மத்தியில் உலக உணவுத் திட்டத்தினால் அண்மை யில் நடத்திய ஆய்வொன்றின் மூலம் இது தெரியவந்திருக்கின்றது.

இந்த சிக்கல்களை சமாளிப்பதற்காக தமது தங்க ஆபரணங் களை விற்பது போன்ற பல்வேறு உபாயங்களை அவர்கள் கை யாண்டு வருவதாகவும் உலக உணவுத்திட்டம் தனது ஆய்வின் அடிப்படையில் தெரிவிக்கின்றது.

இடம்பெயர்ந்து முகாம்களில் வசிக்கின்ற 25ஆயிரம் பேருக்கும் உறவினர், நண்பர்களது வீடுகளில் வசிப்பவர்களுக்கும், மீள்குடியேறியுள்ள குடும்பங்களுக்குமான நிவாரண உணவுப் பொருட்களையும் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் உள்ள 3 இலட்சம் பள்ளி குழந்தைகளுக்கும் 2 இலட்சம் கர்ப்பிணிமார் மற்றும் கைக்குழந்தைகளைக் கொண்ட தாய்மார்களுக்கும் உரிய போசாக்கு உணவுப்பொருட்களையும் உலக உணவுத்திட்டமே வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply